--- --:--:-- --

கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனர்..!

20

ஹைதராபாத்தில் ஆட்டோவில் பயணித்த பொறியியல் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு ஆடைகளையும் அபகரித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

 

ஹைதராபாத்தை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்புவதற்காக ஆட்டோவில் பயணித்துக்கொண்டிருந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவை நிறுத்தி ஓட்டுநர் அந்த மாணவியை புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு ஆடைகளை கலைந்து சென்றார்.

 

அந்த மாணவி செய்வதறியாது புலம்பி கொண்டிருந்ததை பார்த்த அந்த பகுதி பெண்கள் மாணவிக்கு ஆடைகளை வழங்கியதோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon