--- --:--:-- --

தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி செலுத்த அனுமதி..!

15

மிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த மாதம் 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

 

மருத்துவர்கள், செவிலியர்கள் பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரொனா தடுப்பூசிக்கு சில தனியார் மருத்துவமனைகளிலும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 

சென்னையில் உள்ள 34 தனியார் மருத்துவமனைகள் உட்பட மாநிலம் முழுவதும் 195 மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

தனியார் மருத்துவமனைகளில் முன் களப்பணியாளர்கள் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பூசி செலுத்த இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

Leave a Reply

Right Menu Icon