ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென உயிரிழப்பு..!
புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மணவில்லி பகுதியை சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் 16 வயது மகன் தர்ஷன் செல்போனில்ஃபயர்வால் என ஆன்லைன் கேமில் மணிக்கணக்கில் விளையாடிக்கொண்டிருந்தார். ஹெட் போனில் அதிக சப்தத்துடன் கேம் விளையாடிக் கொண்டிருந்த தர்ஷன் திடீரென சுய நினைவிழந்து மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக பெற்றோர் அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.






