--- --:--:-- --

தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால் சசிகலாவை சந்திக்க அனுமதி இல்லை..!

10

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று கர்நாடகத்தில் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கழித்த சசிகலா விடுதலையாகும் தருவாயில் அவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டு கர்நாடகத்தின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருக்கும் போதே அவர் விடுதலையானார். சிகிச்சை முடிந்த பிறகு அவர் பெங்களூரில் இருக்கக்கூடிய தனி வீட்டில் அவர் தற்போது தங்கியுள்ளார். அவர் தனிமை பிடித்துக் கொண்டிருப்பதால் கர்நாடக அதிமுக செயலாளரை சந்திக்க வில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

கொரொனா முடிந்து நேற்று விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் அடைந்த நிலையில் பெங்களூர் அருகே உள்ள பகுதியில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். ஓய்வு பெற்ற பிறகு சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அவரை காண அதிமுக தலைவர்கள் பெங்களூர் வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை கர்நாடக அதிமுக மாநில செயலாளர் யுவராஜ் மற்றும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் சம்பத் ஆகியோர் இரண்டு பேரும் ஒன்றாக அதிமுக கொடி கட்டியுள்ள ஒரு காரில் சசிகலாவை பார்க்க வந்துள்ளனர்.

 

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon