--- --:--:-- --

திருப்பூர், அலகுமலையில் தொடர்ந்து 4 ஆம் ஆண்டாக “ஜல்லிக்கட்டு” திருவிழா சீறும் காளைகளை பிடிக்க திணறிய வீரர்கள்..!

6

திருப்பூர் அருகே அலகுமலையில் தொடர்ந்து 4-வது ஆண்டாக ஜல்விக்கட்டு திருவிழா விறுவிறுப்பாக நடந்தது. சீறிவந்த  காளைகளை அடக்க இளம் காளையர்கள் திணறல்..

 

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் முக்கியமான ஒன்று ஜல்லிக்கட்டு. தைப்பொங்கல் என்றாலே இனிக்கும் பொங்கல், தித்திக்கும் கரும்புக்கு அடுத்து ஜல்லிக்கட்டு தான் ஞாபகத்துக்கு வரும்.  ஆதிகாலம் முதலே தமிழர்களின் பாரம்பரியத்தோடு ஒன்றிப்போன இந்த வீர விளையாட்டுக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு தடை வந்தது. எங்களின் வீர, பாரம்பரிய விளையாட்டுக்கு தடையா? என தமிழகமே பொங்கி எழுந்தது. குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

 

தமிழகமே 3 நாட்களுக்கு ஸ்தம்பிக்கும் வகையில் அறவழிப் போராட்டம் நடந்தது.  அதுமட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுக்க, பல நாட்களாக நடந்த உணர்ச்சிமிகு போராட்டத்தின் காரணமாக தடை தகர்ந்தது. உலகம் முழுக்க ஜல்லிக்கட்டின் புகழ் மென்மேலும் பன்மடங்கு பெருகியது.

 

பொதுவாக பொங்கலை முன்னிட்டு மதுரையை மையப்படுத்தி சுற்றியுள்ள திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற தென் மாவட்டங்களில் தான் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெறும். என்றைக்கு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றதோ அது முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்த அந்தப்பகுதி மக்களும் ஆர்வம் காட்டி நடத்த தொடங்கினர்.

 

அப்படித்தான், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கமும் இணைந்து கொங்கு மண்டலத்தின் மையமான திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு திருவிழாவை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 25 ஏக்கரில் பிரத்யேகமாக ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு 2018 முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றுவருகிறது. இதனை இச்சுற்றுப்பகுதி மக்கள் ஒரு திருவிழாபோல் ஆயிரக்கணக்கில் பங்கேற்று கொண்டாடி மகிழ்கின்றனர்.

இன்று 4-வது ஆண்டாக அலகுமலையில் ஜல்லிக்கட்டு திருவிழா நடந்தது. தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் 1000 காளைகள் ஆவேசமாக சீறிப் பாய, ஒரு பிரிவுக்கு 75 வீரர்கள் என 11 பிரிவாக 825-க்கும் மேற்பட்ட  வீ ரர்கள் விட்டேனா பார்? என காளைகளின் திமிலை அடக்கும் திமிருடன் வீராவேசத்துடன் காளைகளுடன் மல்லுக்கட்டி திணறி ஜெயித்தனர். பல ஜல்லிக்கட்டு மாடுகளை பிடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர்.

 

இருந்தாலும் விடாமுயற்சி செய்து சிலவீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்து தங்கள் ஆம்பிளை என நிரூபித்தனர்.
இதில் பல காளைகள் மீண்டும் மீண்டும் திரும்பி வாடிவாசல் பகுதிக்கு வர மாடுபிடி வீரர்கள் பயந்து பின்வாங்கினர்.

 

இந்த நிலையில்  ஒரு கருப்பு காலை மாடு வாடிவாசல் பகுதிக்கு திரும்பி வர  வீரர்கள்  பிடிக்க முடியாமல் போக அரைமணி நேரம் போக்கு காட்டியது இதனால் வெறுத்து போன ஜல்லிக்கட்டு நிர்வாகத்தினர் இந்த காளியை அடக்கினால் ரூ 1000 தரப்படும் என அறிவிக்க அதுவும் முடியாமல் போனது.

 

தொடர்ந்து ரூ 4500 வரை ரேட் கூட்ட அப்போதும் முடியாமல்போனது அதில் ஒரு வீரர் தைரியமாக முன்வந்து திமிலை பிடிக்க அது போக்குக்காட்டியது. அந்த வீரருக்கு பணபரிசு அளிக்கப்பட்டது. பின்னர் வேன் மூலம் கயிறு கட்டி அந்த காளை கொண்டுசெல்லப்பட்டது. சிலர் மது அருந்திவிட்டு காளையை பிடிக்கவர எவ்வளவோ டுத்து சொல்லியும் போலீசார் அவர்களை பிடித்து வெளியேற்ற முன்வரவில்லை. அதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

 

விழாவில் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், எம்.எல்.ஏ க்கள் தனியரசு, கரைப்புதூர் நடராஜ், உள்பட மாவட்ட உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.  இதனைக்காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டுள்ளதால் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு களை கட்டியுள்ளது. விழாவுக்காக பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டு இருந்தது.

Leave a Reply

Right Menu Icon