திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி..!
நாடு முழுவதும் திரையரங்குகளில் தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி திரையரங்கு டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், திரையரங்குகளில் முகக் கவசம் அணிவது, உடலை பரிசோதனை செய்வது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காட்சி திரையிடப்பட்ட பின்பு மறு காட்சி இடைவெளி என்பது அவசியமாகும்.
24 முதல் 30 டிகிரி வரை ஏசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி, அடிக்கடி கை கழுவுவது போன்ற நடைமுறைகளை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஓடிடியில் வெளியாகும் தொடர்கள் படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரகாஷ் ஜவடேகர் படங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.







