--- --:--:-- --

வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து..!

2

கன்னியாகுமரி அருகே வீட்டில் குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு காஸ் சிலிண்டரை அகற்றியதால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் இரவிபுதூர்கடை சின்னா தெருவை சேர்ந்தவர் கபீர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

 

கபீரின் மனைவி பசிலா மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜ் வெடித்ததில் சமையல் அறையில் தீ பிடித்தது. அக்கம் பக்கத்தினர் உடனே குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு முதற்கட்டமாக சமையல் எரிவாயு சிலிண்டரை அகற்றியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ பற்றி எரிந்து தீயை தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர்.

 

குடியிருப்பு பகுதியில் வீட்டில் தீ பிடித்ததால் அந்த பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்பட்டது. விபத்து குறித்து திருவட்டார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

முதல்கட்ட விசாரணையில் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீப்பிடித்ததில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon