--- --:--:-- --

அரசு ஆசிரியருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை..!

3

த்தாம் வகுப்பு அரசு ஆசிரியருக்கு கொரொனா உறுதியானதை அடுத்து அரசு உயர்நிலைப்பள்ளி மூடப்பட்டுள்ளது. ஆசிரியருக்கு தொற்று உறுதியானதையடுத்து 9 ஆசிரியர்களுக்கும் 20 மாணவர்களுக்கும் கொரொனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.பழனி அருகே சின்ன காந்திபுரம் கிராமம் உள்ளது.

 

இந்த கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வந்தது. தற்போது கடந்த வாரம் தமிழக அரசு உத்தரவில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது இதையடுத்து பத்தாம் வகுப்புக்கு பள்ளி நடைபெற்று வருகிறது.

 

அந்த பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர் ஒருவருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரொனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

 

ஏற்கனவே சேலம் அருகே பள்ளி மாணவி ஒருவருக்கு கொரொனா உறுதியாக இருந்த நிலையில் அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon