--- --:--:-- --

விவசாயிகளிடம் 200 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர்..!

7

ழையால் சேதமான பயிர்களுக்கான நிவாரணத்துக்காக விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் 200 ரூபாய் பணம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகாருக்குள்ளான கிராம நிர்வாக அலுவலர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் 1 லட்சம் ஏக்கருக்கு மேலான நெற்பயிர்கள் உள்ளிட்ட நிலக்கடலை உள்ளிட்ட தானிய பயிர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. எனவே வேளாண்மைத் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

 

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது இடத்தில் காணப்பட்ட வயல் புகைப்படத்துடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறி அறிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பாதிப்புகள் குறித்து விண்ணப்பித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில்உள்ள கிராம நிர்வாக அலுவலர் விவசாயிகளுக்கு விண்ணப்பம் தருவதற்கு ரூபாய் 200 ரூபாய் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. அந்த கிராம நிர்வாக அலுவலர் வேம்பு அரசு விவசாயிகளிடம் தட்டச்சு பணிக்காக 200 ரூபாய் வழங்க வேண்டும் என்று கேட்டு வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

 

அது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாதைகியயடுத்து புதுக்கோட்டை ஆட்சியர் உமாமகேஸ்வரி பரிந்துரையின்பேரில் அறந்தாங்கி சார் ஆட்சியர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon