விமானத்தில் சென்ற சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு..!
தந்தையுடன் மும்பைக்கு விமானத்தில் சென்ற 7 வயது சிறுமி நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உத்திர பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஆயூசி மருத்துவ சிகிச்சைக்காக அவரது தந்தை லக்னோவில் இருந்து மும்பைக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
நடுவானில் சிறுமிக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டதையடுத்து விமானம் அவசர அவசரமாக நாக்பூரில் தரையிறக்கப்பட்டது.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு ஹீமோகுளோபின் குறைபாடு இருந்ததால் விமானம் அதிக உயரத்தில் பறந்தபோது மூச்சுத்திணறல் உண்டாகி மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.







