மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர்..!
சென்னையில் மனைவியின் தங்கையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செனாய் நகரை சேர்ந்த ஜான் பாஷா என்பவர் 15 வயதான அந்த சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வீட்டிற்கு வரும் போதெல்லாம் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. பொங்கலன்று மருந்தகம் சென்று வருவதாக வீட்டை விட்டு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பாததால் புகாரின்பேரில் அமைந்தகரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த சிறுமி மதுரவாயலில் உள்ள ஜான் பாஷாவின் அலுவலகத்தில் இருந்தது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.







