13 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி நேரம் 16 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்த சிறுமி..!
பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தில் 8 வயது சிறுமி 13 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டுள்ளார். சேலத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் என்ற இந்த சிறுமியின் சாதனை ஓட்டத்தை மாநகர காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்துள்ளார்.
சேலம் அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து தொடங்கிய சோதனை ஓட்டம் அஸ்தம்பட்டி, 5 ரோடு வழியாக சென்று காந்தி விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்துள்ளது. 13 கிலோ மீட்டர் தொலைவை 1.16 மணி நேரத்தில் சிறுமி கடந்துள்ளார்.
சிறுமியின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து நோபல் புக் ஆஃ வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அதற்கான கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறுமியை பாராட்டியது.







