--- --:--:-- --

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமாகியுள்ளார்..!

8

மிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தற்போதைய துணைத் தலைவருமான ஞானதேசிகன் காலமாகியுள்ளார். உடல் நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.

 

அவருக்கு வயது 71. 2001ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக சிறப்புற பணியாற்றி தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளை மத்திய அரசுக்கு கொண்டு சென்றவர்.

 

மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் 2009ஆம் ஆண்டு ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon