--- --:--:-- --

காவல்துறையினரின் பங்கு அளப்பரியது என்று பாராட்டிய முதல்வர்..!

15

மிழகம் அமைதி பூங்காவாக திகழ காவல்துறையினரின் பங்கு அளப்பரியது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார் .பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

 

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த முதல்வருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மரியாதை செலுத்தி வரவேற்பளித்தனர். பூங்கொத்து கொடுத்து வரவேற்ற குழந்தைகளுக்கு முதலமைச்சர் சார்பில் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.

 

பின்னர் பொங்கல் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கலுடன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். முதலமைச்சர் காவல்துறையினரின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். காவல்துறையினரின் பிள்ளைகள் முதல்வருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

 

மைதானத்தில் வீடுகள், மாட்டுவண்டி கிணறு என ஒரு கிராமமே தத்துரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. இவற்றைப் பார்வையிட்ட முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

 

உரையாற்றிய முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் காவல் துறையினருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக பெருமையுடன் பட்டியலிட்டார்.

Leave a Reply

Right Menu Icon