சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிக முக்கிய நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை இன்று ஐய்யப்பனுக்கு அனுபவிப்பதற்காக திருவாபரணம் ஊர்வலமாக கோயிலுக்குள் சாஸ்தா கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
கொரொனா கட்டுப்பாடுகள் காரணமாக 50 பேர் மட்டுமே இந்த ஊர்வலத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இன்று மாலை சபரிமலையை அடையும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படவுள்ளது. இதன் பின் மாலை 6.30 மணி அளவில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.
வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் மகர ஜோதியை தரிசிக்க சபரிமலையில் திரண்டிருப்பார்கள். ஆனால் கொரொனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முறை 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.






