பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்த யூடியூப் சேனல்..!
பணம் வாங்கிக்கொண்டு யூடியூப் சேனலுக்கு ஆபாசமாக பேசி பேட்டி கொடுத்திருந்த பெண்ணுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் பெண் ஒருவர் யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசும் வீடியோ வைரல் ஆன நிலையில் சம்பந்தப்பட்ட சேனலை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் தங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு பணம் கொடுத்து ஆபாசமாக பேச வைத்தது தெரியவந்தது.
மேலும் இது குறித்து தாம் அளித்த புகாரின் பேரில் தான் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக அந்தப் பெண் கூறியிருந்த நிலையில் அந்தப் பெண் அப்படி புகார் கொடுக்காமல் புகார் கொடுத்ததாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.






