தமிழகத்தில் மேலும் 3 ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அரசு ஒப்புதல்..!
தமிழகத்தில் மேலும் 3 ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டத்திலுள்ள ராயபுரம், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டத்திலுள்ள சூரியூர் ஆகிய ஊர்களில் நாளை முதல் இந்த மாதம் 31ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மதுரை மாவட்டத்தின் மூன்று ஊர்கள் ,கிருஷ்ணகிரியில் மூன்று ஊர்கள், திருப்பத்தூரில் 13 ஊர்கள் சிவகங்கையில் ஒரு ஊரில், வேலூரில் 25 ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழா ஆகிய பெயர்களில் போட்டிகளை நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






