ரகசியமாக திருமணம் செய்து கொண்ட கணவன் ஊரறிய திருமணம் செய்ய மறுத்ததால் கொலை..!
காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்ட கணவன் ஊரறிய திருமணம் செய்ய மறுத்ததால் மனைவி அவனை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.
மார்க்க பள்ளி கிராமத்தை சேர்ந்த தாதாஜி என்பவர் வேறொரு கிராமத்தை சேர்ந்த பவானி என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். நான்கு மாதங்களாக குடும்பம் நடத்திய நிலையில் ஊரறிய திருமணம் செய்ய தாதாஜியை பவானி வற்புறுத்தியதாகவும் அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் கொண்ட பவானி சம்பவத்தில் தாதாஜியிடம் பின்னால் அமர்ந்து சென்ற போது கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பவானியை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






