--- --:--:-- --

வரும் 19ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு..!

5

ரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரொனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப் பட்டிருக்கும் நிலையில் தற்போது வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இதற்காக பெற்றோரிடம் கருத்துக் கேட்பு நடத்தப்பட்டது அதில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோர் பள்ளிகள் திறக்கப்படுவதே சரி என கூறப்படுகிறது. தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 

அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon