த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் – மேலும் 6 பேர் கைது
ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய புகாரில் மேலும் 4 பேரை கைது செய்தது காவல் துறை. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்க தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் என புகார் அளிக்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த 3 பேரும், கரூரை சேர்ந்த 2 பேரும், நாமக்கல்லை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த செல்வன், ஸ்ரீநிவாசன், ராஜேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்திக், நாமக்கல்லை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.





