--- --:--:-- --

மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் அதிர்ச்சி..!

2

திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய், விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

மிகப் பெரிய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. படக்குழுவினர் மற்றும் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர ஒன்றரை வருடமாக போராடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த படத்தை தியேட்டரில் நிச்சயம் ரசிப்பீர்கள் என்று நம்புவதாக இந்த படம் தொடர்பான காட்சிகளை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோன்று மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனமும் படக்காட்சிகளை யாரும் பகிர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon