--- --:--:-- --

மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் நச்சு..!

3

புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட குடிநீரில் நச்சுத்தன்மை வாய்ந்த திரவம் கலந்து இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தண்ணீருக்கு பதிலாக கண்ணாடி துடைக்க வைக்கப்பட்டிருந்த திரவத்தை பாட்டிலில் அடைத்து கொடுத்ததாக தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

புகாரை தொடர்ந்து தன்வந்திரி நகர காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் இது குறித்து சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

ஆளுநர் கிரண்பேடி அரசின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி இன்று போராட்டம் நடத்த உள்ள நிலையில் குடிநீரில் நச்சுத்தன்மை கலந்ததாக ஆட்சியர் அளித்திருக்கும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon