போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..!
டெல்லி எல்லைகளில் நாற்பத்தி நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் ஏழு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இந்த நிலையில் விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கான ஒத்திகை டெல்லியில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் சாலையில் நடைபெற்றது.







