--- --:--:-- --

அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு..!

7

ரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

 

இதுதொடர்பாக திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் அமர்வு அவசர வழக்காக விசாரித்தது.

 

அப்போது பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப் பொருட்கள் மற்றும் பரிசு தொகை வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இதனை பதிவு செய்த நீதிபதிகள் அரசின் சுற்றறிக்கையை இன்று மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon