--- --:--:-- --

கள்ள காதலியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலன்..!

2

ரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கள்ள காதலியை கட்டையால் அடித்துக் கொலை செய்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். பாப்பாத்தி காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த விஸ்வநாதனுக்கும், இதே பகுதியை சேர்ந்த ராஜி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

 

கூலித் தொழிலாளர்களான இவர்கள் தேங்காய் பறிப்பதற்காக கர்நாடக மாநிலம் ராமாபுரத்திற்கு சென்று விட்டு வனப்பகுதி வழியாக ஊர் திரும்பும் வழியில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரத்தில் ராஜியை விஸ்வநாதன் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon