நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகை..!
நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் பார்க் ஸ்பீட் என்ற இடத்தில் அனைத்து மதத்தையும் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அந்த இடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இயேசுபிரான் அவதரித்ததை குறிக்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற இந்நிலையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிய வில்லை.
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள பிரபலமான தேவாலயத்தில் சமூக இடைவெளியுடன் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறைந்தளவிலான கிறிஸ்தவர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றன.
கேரளாவின் கொச்சியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பேராலயம் பல வண்ணங்களில் ஒளி வண்ணத்தில் மிதந்தது. அந்த ஆலயத்தில் குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதைப்போல டெல்லி, மகாராஷ்டிரா, பெங்களூரு உட்பட நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் காணப்பட்டது.







