வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ அலைகளா..?
அண்மையில் கண்டறியப்பட்ட ரேடியோ சமிக்கை ஒலிகள் வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய சமிக்கையாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கணித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேற்று கிரக வாசிகள் குறித்த ஆய்வின் போது சூப்பர் எர்த் என்ற கிரகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த சூப்பர் எர்த் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருக்கலாம் என வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதனை தொடர்ந்து அந்த சூப்பர் எர்த் கிரகத்தை நோக்கி கடந்த 2017ஆம் ஆண்டு ரேடியோ அலைகள் அனுப்பப்பட்டன. இதன் முடிவுகள் முழுமையடைய 24 ஆண்டுகள் ஆகும் என்பதால் 2041 ஆவது ஆண்டில் வேற்றுகிரகவாசிகளோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகக் கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கிடையில் அண்மையில் கண்டறியப்பட்ட ரேடியோ அலைகள் நீண்ட தூரத்தில் இருந்து வந்தவை அல்ல என்றும் அவை பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமாக பிராக்சிமா சென்டாரிலிருந்து வரப்பெற்று சத்தம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.







