--- --:--:-- --

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட சாரண இயக்கத்திற்கு  புதிய அலுவலக கட்டிடம் – முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் திறந்து வைத்தார்

4

திருப்பூர் கல்வி மாவட்ட சாரண சாரணியர் இயக்கத்தின் புதிய அலுவலகம் கட்டிடத் திறப்பு விழா அவிநாசி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவில் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் தலைமை தாங்கி புதிய அலுவலகக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

 

விழாவில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். மாவட்டத் தலைவரும், திருப்பூர் மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் செயலாள ருமான நாராயணமூர்த்தி, துணைத்தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், சரவணகுமார், துரைசாமி, ஜெயந்தி, மாநில உதவி ஆணையர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 

மாவட்ட சாரண அலுவலகக் கட்டிடத்திற்கு ரூ 50 ஆயிரம் மதிப்பில் வர்ணம் அடித்து, அதன் சுற்றுப்பகுதியை சுத்தம் செய்து பெயர்ப்பலகை வைக்க நிதிஉதவி செய்த அவிநாசி பழனியப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் ராஜ்குமார் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டார்.

 

விழாவில், கோவை கொங்கு மண்டல சாரண இயக்க ஆலோசகர் சிவகுமரன், மாவட்ட பயிற்சி ஆணையர் லக்ஷ்மணன், அமைப்பு ஆணையர் சத்யமூர்த்தி, மாவட்ட பயிற்சி ஆணையர் அமானுல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

 

இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாக செயற்குழுவின், மாவட்டப் பொருளாளராக சரவணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட உதவி ஆணையராக ஏ.கே.ஆர். அகாடமி நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

விழாவில் கடந்த வருடத்தில் நடந்த சாரண-சாரணிய நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் குறித்த விளக்க படங்கள் ( சார்ட் ) மற்றும் புகைப்படக்கண்காட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. பள்ளி வளாகத்தில் சாரண சாரணியர் அலுவலக கட்டிடத்திற்கு ஏற்பாடு செய்ததுடன் அரசு அனுமதியும் பெற்றுதந்த பள்ளி தலைமையாசிரியை ( பொறுப்பு ) திலகவதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சாரண ஆலோசகரும், மாவட்ட உதவி ஆணையருமான ராஜாராம் செய்திருந்தார். முடிவில் மாவட்ட உதவி செயலாளர் தனசிங் நன்றி கூறினார். விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் சாரண – சாரணிய ஆசிரியர்கள், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon