இரண்டாம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார் கமலஹாசன்..!
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை இன்று தொடங்குகிறார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 13ஆம் தேதி சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் கமல்ஹாசனின் தொடங்கினார்.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து 4 நாட்களாக அவர் பரப்புரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் இன்று முதல் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர்கள் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் பரப்புரை நடைபெற உள்ளது. எம்ஜிஆர் மக்கள் கட்சி அந்த சின்னத்தை வேண்டாம் என அறிவித்துள்ளது. கடந்த தேர்தலில் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தங்களுக்கு வேண்டாம் என அந்தக் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.







