இரண்டாம் கட்ட பரப்புரையை கமலஹாசன் நாளை தொடங்குகிறார்..!
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இரண்டாம் கட்ட பரப்புரையை நாளை தொடங்குகிறார். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 13ம் தேதி சீரமைப்போம் தமிழகத்தை என்ற பெயரில் பரப்புரையை தொடங்கினார்.
நான்கு நாட்களில் தென் மாவட்டங்களில் பரப்புரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் மீண்டும் நாளை முதல் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை நடைபெற உள்ளது.






