உறவினர் வீட்டுக்கு சென்ற டிஎஸ்பி சடலமாக மீட்பு..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டின்னருக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற பின் டிஎஸ்பி அதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் நகர சிஐடி பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த லட்சுமி நேற்று இரவு அன்னபூர்ணேஸ்வரி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு டின்னருக்கு சென்றுள்ளார். சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாக கூறி விட்டு அறைக்குள் சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது அவர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.







