--- --:--:-- --

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா அரசியலுக்கு வருகிறார்..!

1

டிகர் சத்யராஜின் மகள் திவ்யா இன்னும் சில தினங்களில் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார். ஊட்டச்சத்து நிபுணரான இவர் அந்தத் துறை சார்ந்த பல முன்னெடுப்புக்களை செய்து வருகிறார்.

 

இந்த நிலையில் தமிழர்கள் நலன் காக்கும் வகையில் அரசியலில் தன் பங்களிப்பு இருக்கும் என்றும் அரசியல் என்பது வியாபாரம் அல்ல என்பதை அழுத்தமாகச் சொல்லி தன் தந்தை வளர்த்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த நிலையில் திவ்யாவின் அரசியல் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பேன் என்று நடிகர் சத்யராஜ் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் தன் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon