--- --:--:-- --

அமெரிக்காவில் இன்று முதல் கொரொனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது..!

4

மெரிக்காவில் இன்று முதல் கொரொனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து அமெரிக்காவிலும் பயன்பாட்டிற்கு வருகிறது.

 

முதற்கட்டமாக 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தடுப்பூசியை கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. சுகாதாரப் பணியாளர் களுக்கு முன்னுரிமை என்றும் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

 

திங்கட்கிழமை 145 இடங்களிலும், செவ்வாய்க்கிழமை 425 இடங்களிலும், புதன்கிழமை 66 இடங்களிலும் தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் வாரத்தில் மூன்று லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த தடுப்பூசிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதால் இதற்காகவே பிரத்யேக கண்டெய்னர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவில் மீண்டும் கொரொனா பரவல் அதிகரித்துள்ளதால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வண்ணமே உள்ளது.

 

நாளொன்றுக்கு மூவாயிரத்துக்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர். இங்கு மொத்த பாதிப்பு ஒரு கோடியே 60 லட்சத்தை கடந்துள்ளது. இந்தச் சூழலில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவது கொரொனாவை ஒழிக்கும் நடவடிக்கையின் முக்கிய மயில்கல் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

மார்ச் மாதத்திற்குள் 10 கோடி டோஸ்களை பெற பைசர் நிறுவனத்துடன் அமெரிக்க அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒருவருக்கு இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும். 21 நாட்கள் இடைவெளியில் போட வேண்டும் என்பதால் வரும் நாட்கள் கொரொனாவிற்கு எதிரான போரில் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாக இருக்கும்.

Leave a Reply

Right Menu Icon