--- --:--:-- --

தங்களுக்கு பதவி முக்கியமில்லை – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டி !!!

0.1

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கனிமொழிக்கு கோவை மாவட்டத்தைப்பற்றி தெரியாது.யாரோ எழுதிக்கொடுத்ததை வாசிக்கிறார்.5 ஆண்டுகளில் சாலை வசதி,அடிப்படை கட்டமைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்றுள்ளன.

 

அவினாசி சாலையில் சுமார் 10 கிமீ தூரத்திற்கு மேம்பாலம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளோம் என தெரிவித்தார்.

 

மேலும்,தங்களுக்கு பதவி முக்கியமில்லை.மக்களுக்கான வளர்ச்சித்திட்டப்பணிகளை முடிக்க வேண்டும் எனவும்,எல்லா கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளன.5 அரசு கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது.ரூ.25 கோடி மதிப்பீட்டில் புற்றுநோய் சிகிச்சை கருவி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்,பாண்டியாறு – நல்லாறு திட்டம் செயல்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

 

மேலும்,தங்களை பொறுத்தவரை மனசாட்சியோடு செயல்படுகிறோம்.மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திமுகவை பொறுத்தவரை ஐபேக் சொல்வதை கேட்டு நடக்கிறார்கள்.ரூ.230 கோடி மதிப்பீட்டில் நொய்யலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குடிமராமத்து பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும்,கொங்கு மண்டலம் எப்பவுமே அதிமுகவின் கோட்டை.சேலம் மட்டுமல்ல கொங்கு மண்டலம்,டெல்டா மாவட்டங்களில் எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகி உள்ளது.இதனால் தான் திமுக பிரச்சாரத்தை அங்கெல்லாம் அதிகரித்து விட்டனர் எனவும் தெரிவித்தார்.

 

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் ராசாமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon