--- --:--:-- --

கடை திறப்பு விழாவின் போது முல்லைக்கு நேர்ந்தது என்ன..!

6

சின்னத்திரையில் முல்லையாக வளர்ந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக பிணக்கூறாய்வு அறிக்கையும் காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில் வருகிற ஜனவரி மாதம் 13ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேதி ஒதுக்கிக் கொடுத்த நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

சித்ரா இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தி வந்த செல்போன் நம்பர் மாயமானதாக கூறப்படுகிறது. முன்னதாக சித்ராவின் செல்போனை ஆய்வு செய்ததில் தினேஷ் என்ற நபரிடமிருந்து அதிக அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல் வந்ததையடுத்து தினேஷ் குறித்து விசாரித்தபோது அவர் சித்ராவுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணி செய்து வந்தவர் என்பது தெரியவந்தது.

 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த சித்ரா சின்னத்திரை மட்டுமில்லாது பல்வேறு ஊர்களில் கடை திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வந்துள்ளார். தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தினேஷ் என்ற நபரை அவர் பிரத்தியேகமாக நியமித்து இருந்ததாக கூறப்படுகிறது.

 

காதலனை பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா கடந்த பெரம்பலூரில் பரிசுப்பொருள் விற்பனையகத்தில் திறப்பு விழாவிற்கு செல்ல தேதி ஒதுக்கியுள்ளார். அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய தினேஷ் அழைத்துள்ளார். அவருடன் உடன் சென்று மக்கள் கூட்டத்தில் மிதந்த சித்ராவை பாதுகாப்பாக அழைத்து சென்றுள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ தமிழ்ச்செல்வனும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடி செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

 

பொங்கலுக்கு பின்னர் தனது காதல் கணவர் ஊரறிய திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த சித்ரா அதற்கு முன்பாக ராமநாதபுரத்தில் ஜனவரி மாதம் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கும் வருவதாகவும் ஒப்புக் கொண்டதாகவும் அதற்கு மறுநாள் யாரும் எதிர்பாராத வகையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் தெரிவித்தார்.

 

மேலும் இன்ஸ்டாகிராமில் சித்ரா பயன்படுத்தியது தன்னுடைய செல்போன் நம்பர் தான் என்று கூறிய தினேஷ் அந்த செல்போன் தன்னிடம் தான் உள்ளது எனவும் கூறியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் மேலும் சிலரிடம் இருந்து வந்த சர்ச்சைக்குரிய குறுந் தகவல்களை வைத்து அவர்களிடமும் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

ஹேம்நாத் பல பெண்களுடன் பப்புகளில் சுற்றிவந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்றும், ஏற்கனவே திருமணமானவர் என்றும் தோழிகளின் எச்சரிக்கையை மீறி சித்ரா பதிவு திருமணம் செய்து கொண்டதோடு பெற்றோரை வற்புறுத்தி ஊரறிய திருமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

ஏராளமான தொடர்பு எண்கள் போலீசாரின் கைகளில் சிக்கி இருப்பதால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு தொல்லை கொடுத்த நபர் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon