விவசாயிகள் அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்..!
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் விவசாயத்தை அபகரித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுப்பதுதான் வேளாண் சட்டங்களின் நோக்கம் என குறிப்பிட்டுள்ளார். தங்கள் மாநிலங்களில் உரிமைகளைப் பறிக்கிறது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களால் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கக்கூடிய மானிய விலையிலான உணவுப் பொருட்கள் தடைபடும் என்று நியாயவிலை கடைகள் மூடப்படும் எனவும் ஸ்டாலின் அச்சம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் முழு அடைப்பு அனைவருக்குமானது நம்மை காக்கும் விவசாயிகளை நாமும் காப்போம் என்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு ஆதரவு அளிப்போம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







