--- --:--:-- --

அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

1

மிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்றும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்த நிலையில் வங்க கடலில் நீடிப்பதால் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon