19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சிமி இயக்கத்தின் தலைவர் கைது..!
கடந்த 19 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த சிமி இயக்கத்தின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர் இஸ்லாமிய இயக்கமான சிமியின் முக்கிய தலைவரான 58 வயது அப்துல்லா என்பவர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடி மக்கள் சீர் திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டியதாக அவர் மீது புகார் உள்ளது.
போலியான வீடியோக்களை வெளியிட்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த புகாரில் அப்துல்லாவை 19 ஆண்டுகளாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று அவரை டெல்லியில் கைது செய்துள்ளனர்.







