--- --:--:-- --

அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..!

1

கொரொனா தடுப்பு மருந்து வினியோகிப்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 

கொரொனா தடுப்பு குறித்து கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி 28-ஆம் தேதி கொரொனா தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் நேரில் பார்வையிட்டார்.

 

இதையடுத்து மருந்து தயாரிக்கும் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கொரொனா மருந்து தயாரானால் அதை வழங்குவதில் யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்குவது எப்படி வினியோகிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon