--- --:--:-- --

தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கு கிடைத்த 7 கோடி ரூபாய் பரிசு..!

2

காராஷ்டிராவைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சர்வதேச ஆசிரியர் பரீட்சைக்கு தேர்வாகிய 7 கோடி ரூபாயை தட்டிச்சென்றுள்ளார். சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான ரஞ்சித் என்பவருக்கு பெண் குழந்தைகளின் கல்விக்கு பாடுபட்டதற்காக இந்த பரிசு கிடைத்துள்ளது.

 

140 நாடுகளில் இருந்து 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்ததில் 10 பேர் இறுதி கட்டமாக தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவராக வந்த ரஞ்சித் வெற்றி பெற்றார்.

 

வர்க்கி பவுண்டேஷன் வழங்கும் பரிசுத் தொகையில் 50 சதவீதத்தை இறுதிக்கட்டமாக தன்னுடன் தேர்வு பெற்ற ஒன்பது பேருக்கு பகிர்ந்து அளிக்க இருப்பதாக ஆசிரியர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon