புரெவி புயலால் தென் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள முதல்வர்..!
புரெவி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என முதல்வர் கூறியுள்ளார். வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்து கொடுத்துள்ளார்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை பெருமழை புயல் வீச கூடும் என்பதால் தென்மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் புயல் குறித்து அச்சம் அடைய வேண்டாம் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.







