படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதியை காண குவிந்த மக்கள்..!
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படப்பிடிப்பு தளத்தில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விதிமுறைகள் பின்பற்றவில்லை என்றும் விஜய்சேதுபதியை காண முகக் கவசங்கள் மற்றும் தனிமனித இடைவெளியின்றி பெண்களும், குழந்தைகளும் திரண்டதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அஞ்சப்படுகிறது.






