சினிமா பாணியில் கொள்ளையனை துரத்தி பிடித்த காவல் உதவி ஆய்வாளர்..!
வழிப்பறியில் ஈடுபட்டவரை சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த காவல் உதவி ஆய்வாளர் பாராட்டுகள் குவிகின்றன. அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட உண்மையான கதாநாயகன் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்றனர். அதனைப் பார்த்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கொள்ளையர்களை இரு சக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மடக்கினர்.
அப்போது ஒருவன் தப்பினான் மற்றொரு கொள்ளையனும் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்ப முயன்றபோது பின்னாடி சென்று அவனது சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார் உதவி ஆய்வாளர்.
துணிச்சலுடன் செயல்பட்டு கொள்ளையடித்தவனை உதவி ஆய்வாளரை சென்னை மாநகர காவல் ஆய்வாளர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார். அந்த வீடியோ காட்சியை பதிவிட்டு இருக்கும் அவர் இது சினிமா படத்தில் வரும் காட்சி அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
செல்போன் பறிப்பு சம்பவத்தில் தலைமறைவாக இருந்த போது மேலும் மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்





