--- --:--:-- --

சென்னை ஆதம்பாக்கத்தில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர்..!

3

சென்னை ஆதம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக அந்த பகுதியில் மழை நீர் தேங்கி இருக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. ஆதம்பாக்கத்தை சுற்றி இருக்கக் கூடிய மசூதி காலனி, வண்டிப்பேட்டை என பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

 

அடுக்குமாடி குடியிருப்புகளின் கீழ்தளத்தில் மழை நீர் முழுவதுமாக தேங்கியுள்ளது. எனவே மக்கள் வெளியே வர முடியாத சூழலும் பிற மக்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது. வாகனங்களும் தண்ணீரின் பாதியளவு மூழ்கியுள்ளது.

 

மழைநீருடன் கழிவுநீரும் கலப்பதன் காரணமாக தொற்று ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்து இருந்தாலும் அவர்களால் குறிப்பிட்ட நேரத்தில் இந்த நீரை அப்புறப்படுத்த முடியவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

 

தண்ணீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் குடியிருப்புவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon