--- --:--:-- --

புதுவையில் கொந்தளிக்கும் கடல்..! கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

6

நிவர் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் புதுச்சேரியில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. நிவர் புயல் புதுச்சேரிக்கு 100 கிலோ மீட்டர் தூரத்தில் தூரத்தில் நிலை கொண்டுள்ளதால் புதுச்சேரியின் கடற்பரப்பில் கடல் சீற்றம் தற்போது அதிகமாக காணப்படுகிறது.

 

குறிப்பாக புதுச்சேரி கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் அலை தற்போது ஆறு அடி வரை உயர்ந்து வருகிறது. புதுச்சேரி கடற்கரையில் மீனவ கிராமங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

சிலர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். புதுச்சேரியின் கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் அலை அதிகரித்து காணப்படுகிறது.

 

எனவே புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இரண்டு குழுக்களும் துணை இராணுவப் படையினர் இரண்டு குழுக்களும் வந்துள்ளனர். புதுச்சேரியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடல் சீற்றத்துடன் கரையை கடக்கும் என்பதால் சேதத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon