--- --:--:-- --

43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது..!

5

ந்தியாவில் செயல்பட்டு வந்த 43 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 69ஏக்கு உட்பட்டு இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

உள்நாட்டு பாதுகாப்பு கருதியும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படி செயல்பட்டதாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

காஷ்மீர் எல்லையில் சீனா இந்தியா இடையேயான எல்லை பிரச்சினை நடந்து வந்த நிலையில் இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் தொடர்ந்தது. அதன் காரணமாக மத்திய அரசு சீன செயலிகளான டிக் டாக் பல செயலிகளுக்கு தடை விதித்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon