புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் தவசி காலமாகியுள்ளார்..!
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிழக்குசீமையிலே படத்தில் அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் நடிகர் தவசி உணவு குழாய் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
முரட்டு மீசையுடன் கம்பீர தோற்றத்துடன் இருந்தவர் புற்றுநோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் மெலிந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது துயர நிலை குறித்து அண்மையில் வீடியோ வெளியிட்டு நிதி உதவி கோரி இருந்தார்.
இதையடுத்து நடிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி அளித்தனர். இந்நிலையில் நடிகர் தவசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான தவசியின் உயிரை உணவுக்குழாய் புற்றுநோய் குடித்துள்ளது. தவசி மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






