நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்..!
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து இன்று முதல் நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இவர் புயல் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
அதை தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் எடையையும் மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். பொதுமக்களும் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற தேவைகளுக்காக பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





