மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் கொரொனா தொற்றால் உயிரிழப்பு..!
தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் சதீஷ் கொரொனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் வழித்தோன்றல்கள் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றன.
காந்தியின் கொள்ளுப் பேரனும், மணிலால் காந்தியின் பேரனுமான சதீஷ் கடந்த ஒரு மாத காலமாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.கொரொனா சிகிச்சையின் போது அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் ஞாயிறு மாலையில் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரின் சகோதரி தெரிவித்துள்ளார். 66 வயதான சதீஷ் பெரிய ஊடகத்துறையில் ஒளிப்பதிவாளராகவும், புகைப்பட கலைஞராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.






