107 வயது முதியவர் மரணத்தை திருவிழாவாக கொண்டாடிய ஊர் மக்கள்..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 107 வயது முதியவர் மரணத்தை அவரது உறவினர்கள் திருவிழாவாக கொண்டாடி இறுதி சடங்கு செய்த சம்பவம் நல்லடக்கம் செய்துள்ளனர் . அறந்தாங்கி அருகே பெரும்புதூர் கிராமத்தை சேர்ந்த 37 வயதான கருப்பையாவுக்கு மகன்கள் மகள் வழி பேரன் பேத்திகள் என 117 குடும்ப வாரிசுகள் உடன் வசித்து வந்துள்ளார்.
கருப்பையா தனது நூறு வயது முதல் ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளை சென்னை திருச்சி, தஞ்சாவூர், உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள உறவினர்கள் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள பெண்கள் மற்றும் கொள்ளுப்பேரன் கேக் வெட்டி கொண்டாடி வந்துள்ளார்கள். வயது மூப்பு காரணமாக கருப்பையா மரணமடைந்துள்ளார்.
கருப்பையாவின் இழப்பை திருவிழாவாக கொண்டாடிய உறவினர்கள் பேரன் பேத்திகள் கரகாட்டம் தப்பாட்டம் வைத்து வாணவேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஆட்டம் பாட்டத்துடன் கருப்பையாவின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று இறுதி சடங்கு செய்தனர்.






